கம்ப்யூட்டர் நண்பன்

வெற்றிலை பாக்கு போடலாமா? >> பெண்கள் விரும்புவது எது? >> அமெரிக்காவில் நீதிபதியாக இந்தியர் நியமனம் >> இரவு தூக்கம் இனிமையாக அமைய >> வழுக்கை தலைக்கு நிரந்தர தீர்வு >> << விஜய் ஜோக் >> << விஜய்க்கு பகிரங்கக் கடிதம் >> << பெண்களுக்கு விஸ்கி மீது மோகம் >> << குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு >> காதல் தோல்வியின் சின்னம் >> மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள் >> காளான் வளர்ப்பு >> விஜய்க்கு பகிரங்கக் கடிதம்! >> வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி
உங்கள் படைப்புக்களையும் உங்கள் கருத்துகளையும் கீழ்க்கண்ட மின்னஞ்சளுக்கு அனுப்பி வைக்கவும் tamilsholai@gmail.com ---------------------------------------------------------------

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வில் பாஸ் செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, வேண்டப் பட்டவர்களை தேர்வில் பாசாக்கி விட்டு, அரசு வேலை பெறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசார், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்து உள்பட 13 உறுப்பினர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். 
அந்த சோதனையில் பிடிபட்ட ஆவணங்களை வைத்து, கடந்த நவம்பர் மாதம் தேர்வாணைய அலுவலகம் மற்றும் ஊழியர்கள், அதிகாரிகளின் வீடுகளில் 2-ம் கட்டமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சிலருடைய வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அவர்கள் குறிப்பிட்ட இடைத்தரகர்கள் மற்றும் சில அதிகாரிகளின் வீடுகளில் 3-ம் கட்டமாக சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனைகளில் கைப்பற்ற ஆவணங்களை வைத்தும், பலரிடம் நடத்திய விசாரணையை வைத்தும் லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு சேர்ந்ததாக பலரது பெயர்கள் கிடைத்தன. அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பட்டியலிட்டு, அவர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ரகசியமாக சேர்த்தனர். மேலும் தேர்வு முடிவுக்காக காத்திருந்த சிலரது பெயர், முகவரி விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.

பின்னர் அவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் போலீசார் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வாக்குமூலத்தையும் போலீசார் பெற்றனர்.

தேர்வில் பாஸ் செய்வதற்காக யாருக்காவது பணம் கொடுத்தார்களா? அப்படி கொடுத்திருந்தால் அந்த தொகை எவ்வளவு? லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் யாராவது தெரியுமா? அவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? என்று கேள்வி மேல் கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.

இந்த சோதனையிலும் போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையிலும், அதற்கான ஆதாரங்களை கைப்பற்றும் வகையிலும் மேலும் சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வளவு சோதனைகளிலும் எந்த அதிகாரிக்கு எதிராக, யார், யார், எப்படிப்பட்ட வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் என்ற தகவலை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டிருந்தால், தகுந்த ஆதாரங்களை திரட்டி அவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் பணிக்கு தேர்வு ஏன்?


முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்திட ஆசிரியர்களை நியமனம் செய்வதில் தேர்வு ஒன்று நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு ஆணை ஒன்றினைப் பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை 8ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களையும், பட்டதாரி ஆசிரியர்களையும் தகுதிக்கான தேர்வு நடத்தி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இப்போதைக்கு அவர்களுக்குத் தகுதி தேர்வு நடத்தப்பட மாட்டாது. அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தனித் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 என்றும், குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஆசிரியர் நியமனத்துக்கு இப்படியொரு தேர்வு ஏன் என்று தெரியவில்லை.

ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்ற பிறகு, இன்னொரு தேர்வு எதற்கு? முந்தைய தேர்வு பயன் அற்றதா, தகுதியற்றதா?

ஆசிரியர் பயிற்சி பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள்; அத்தகையவர்களுக்கு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதுதானே நியாயம்?

இத்தகைய முறையால் எந்தவித ஒழுங்கீனங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்பு இல்லை.

பல ஆண்டு காலமாக பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மூத்தவர்களைக் காட்டிலும் அண்மையில் படித்துத் தேர்வு எழுதி பட்டயச் சான்றிதழோ, பட்டம் பெற்றவர்களோதான் இத்தகுத் தேர்வில் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது தான் நடைமுறை உண்மையாகும்.
நீண்ட காலமாக ஆசிரியர் பணிக்குக் காத்திருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா? அவர்களுக்குப் பணி நியமனம் கிடைக்காதது அவர்கள்மீதான குற்றம் இல்லையே! அரசு தானே அந்த வாய்ப்பினைத் தந்திருக்க வேண்டும்?

இந்த நிலையில் அவர்களை அரசே தண்டிப்பது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கும், இவர்கள் நடத்தும் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு கேள்வி கொடுத்து, அதற்கு நான்கு பதில்களைக் கொடுத்து, எது சரி என்று டிக் செய்ய வேண்டும்  (Multiple Choice)..

ஒற்றையா இரட்டையா என்ற குருட்டாம் பட்சத் தேர்வே தவிர உண்மையான தகுதியைக் கண்டுபிடிக்கும் அளவுகோல் அல்ல இது.
இத்தகைய தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறியது என்ன?

நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சம நிலை என்பதும் கட்டுக் கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட, கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி போல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது  என்று கூறியுள்ளார்களே! (27.4.2007).

நீதிபதிகளில்  இந்தத் தீர்ப்புரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தக் கூடியதுதானே?

ஜாதியை வைத்து ஒரு காலத்தில் மனிதர்களைக் கூறு போட்டதுபோல, மதிப்பெண்களை வைத்து ஆசிரியர்களைத் தரப்படுத்துவது ஆசிரியர் படிப்பையே கேவலப்படுத்துவதாகும்.

பத்தாண்டு, பதினைந்து ஆண்டுகள் வரை பணி நியமனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் திருமணமும் செய்து கொண்டவர்கள். இவர்களைப் புறந்தள்ளி, நேற்றுப் பட்டம் வாங்கி வெளியில் வந்தவர்களுக்குக் கதவு திறந்து விடும் போக்கு சமூக அநீதியாகும்.

என்.சி.இ.ஆர்.டி. சொன்னாலும் சரி, தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தாலும் சரி, இந்த முறையைக் கைவிட ஆவன செய்வதே நியாயமானதும், சமூகநீதியும் ஆகும்.

இந்தத் தேர்வு முறையால் சமூகநீதி பாதிக்கப்படு வதற்கும் வாய்ப்புண்டு என்றும் எச்சரிக்கின்றோம்.

4 நாளில் 10 லட்சம் பேர் கேட்ட 'கொலவெறி’ பாடல்


தனுஷ் எழுதி அவரே பாடியிருக்கும் கொலவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனராம். தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல், வட இந்திய டிவிக்களிலும் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் போடப்பட்டு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. 

16,549 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் அரசு அறிவிப்பு

அரசு பள்ளிக்கூடங்களில் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு மாவட்ட வாரியான காலி இடங்களை அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1,221 காலி இடங்களும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 126 காலி பணி இடங்களும் உள்ளன.

16,549 சிறப்பு ஆசிரியர்கள்

அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஓவியம், தையல், இசை, வாழ்க்கைக்கல்வி, கம்ப்ïட்டர் அப்ளிகேஷன், கட்டிட வேலை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் நியமிக்கப்பட இருக்கும் இந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்), சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு மாவட்ட அதிகாரி ஆகியோர் அடங்கி தேர்வுக்குழு தகுதி உள்ள நபர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும். பணிக்கு தேர்வுசெய்யப்படும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் வேலை. தினமும் காலை அல்லது மதியம் 3 மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக காலி இடங்கள்

இந்த நிலையில், சிறப்பு ஆசிரியர் பணி இடங்களுக்கு மாவட்ட வாரியான காலி இடங்களை அரசு அறிவித்துள்ளது. ஓவிய ஆசிரியர் பணிக்கு 5,253 இடங்களும், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 5,392 இடங்களும், தையல், இசை, கட்டிட வேலை, வாழ்க்கைக்கல்வி, கம்ப்ïட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட தொழிற்கல்வி பணிக்கு 5,904 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஓவிய பாடத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 402 காலி இடங்களும், கோவையில் 385 இடங்களும், வேலூரில் 335 இடங்களும் உள்ளன. உடற்கல்வி பாடத்தில் அதிகபட்ச அளவாக விழுப்புரத்தில் 405 காலி இடங்களும், கோவையில் 395 இடங்களும், வேலூரில் 358 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம்

தொழிற்கல்வி பாடப்பிரிவில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 414 காலி இடங்களும், வேலூரில் 400 இடங்களும், கோவையில் 394 காலி இடங்களும், சேலத்தில் 336 இடங்களும் உள்ளன. வட மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் காலி இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. தென்மாவட்டங்களில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதற்கு காரணம் ஆகும்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 16,549 சிறப்பு ஆசிரியர் பணி இடங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,221 காலி இடங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த படியாக கோவை மாவட்டத்தில் 1,164 இடங்களும், வேலூர் மாவட்டத்தில் 1,093 இடங்களும் உள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...